1000 அறைகளுடன், 9 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட மருத்துவமனை! இன்றுமுதல் நோயாளிகள் அனுமதி! புகைப்படங்கள் இதோ..
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.அந்த வைரஸ் குணம்செய்ய இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சீன அரசு வுஹான் நகரில் 25 ஆயிரம் சதுர மீட்டரில், ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையை கட்டத் தொடங்கியது. மேலும் அந்த மருத்துவமனை 10 நாட்களில் கட்டிமுடிக்கத் திட்டமிடபட்டிருந்த நிலையில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டதில் ஒருநாள் முன்பு நேற்று மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து அதனை சீன அதிபர் ஸீ ஜிங்பிங் தொடங்கி வைத்தார்.

மேலும் 1000 படுக்கையறை, 30 அவசர சிகிச்சைபிரிவுகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் 1400 மருத்துவப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு இன்று முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

