நெஞ்சே படபடக்குது...! கம்பியைத் தொட்ட அடுத்த வினாடியே தீயில் எரிந்தவர்! அலறிடித்து ஓடிவந்த கடைக்காரர்கள்… சிசிடிவியில் பதிவான ஷாக் வீடியோ!!!
சீனாவில் நீண்ட கம்பி ஒன்று உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில், மின்சாரம் தாக்கி ஒருவர் தீக்காயமடைந்தார். ஹெனான் மாகாணத்தின் கைஃபெங் நகரில் நவம்பர் 3-ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. உடலில் தீப்பற்றிய நிலையில் அவர் அலறியதைக் கண்ட உள்ளூர் கடைக்காரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய நீண்ட பொருள்
கைஃபெங் நகரில் உள்ள பொதுவீதையில் ஒருவர் நீண்ட கம்பி அல்லது குழாய் போன்ற பொருளை கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பொருள் எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது.
அடுத்த சில நொடிகளில் பயங்கர மின் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டதுடன், அவரது ஆடைகளிலும் உடனடியாகத் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் வலியால் அலறியுள்ளார்.
கடைக்காரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்
அருகில் இருந்த கடைக்காரர்கள் நிலைமையைப் பார்த்ததும் தீயணைப்பான் கருவிகளுடன் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவியும் அளித்தனர். பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரணை
பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அவர் எதற்காக அந்த நீண்ட பொருளை எடுத்துச் சென்றார், அது எவ்வாறு மின் கம்பியில் உரசியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
开封一男子持长竿触碰高压线瞬间!目击者:“听到三声巨响”。https://t.co/EWqKdPSNHj https://t.co/WQqjdNqcQ9
— 希望之聲 – 中國時局 (@SoundOfHope_SOH) November 5, 2026
太吓人!开封市男子遭高压电电击,烧成一个火球!11月3日,河南开封市黄河路南段,一男子不知何故触碰到高空的高压线,遭猛烈电击,浑身立刻烧成一个火球。救护车到场救治,把重度烧伤的男子拉走。 https://t.co/ugIxtIgIcs
— 希望之聲 – 中國時局 (@SoundOfHope_SOH) November 5, 2026
இதையும் படிங்க: ஐயோ.. கடவுளே! வகுப்பறையில் ஆசிரியரிடம் போன 3 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!