சோதனைகளை தாண்டி லண்டனில் மகன் பெற்ற சாதனை! பெற்ற அப்பாவே தடையா? கணவருக்கு ஆப்பு வைத்த ஆர்த்தி...!!!
என்ன தான் நடக்குது? வகுப்பறையில் இடுப்பில் கை வைத்தபடி நடந்து சென்ற 9-ம் வகுப்பு மாணவி! அடுத்த நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி... பதறவைக்கும் காட்சி..!!!
டெல்லி மயூர் விஹாரில் உள்ள தனியார் பள்ளியில், வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி காலை பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நிலையில், டெல்லி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி
டெல்லி மயூரைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மயூர் விஹாரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நவம்பர் 4-ஆம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற அவர், வகுப்பறைக்குள் இருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: ஐயோ.. கடவுளே! வகுப்பறையில் ஆசிரியரிடம் போன 3 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!
ஆனால், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து காலை 9.52 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான கடைசி நிமிடங்கள்
பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சிறுமி வகுப்பறைக்குள் நுழைந்து இடுப்பில் கையை வைத்தபடி நடந்து வருவதும், சில விநாடிகளிலேயே திடீரென மயங்கி விழுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. இதைக் கண்ட ஆசிரியர் உடனடியாக அவருக்கு உதவ முயன்றுள்ளார். சிறுமி சுயநினைவை இழந்ததால், அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை
முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அறிக்கைகள் மற்றும் விசாரணையின் முடிவில்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
#Delhi: मयूर विहार स्थित प्राइवेट स्कूल की तीसरी कक्षा की छात्रा सुबह करीब 9 बजे क्लास में अचेत होकर गिर पड़ी। निर्माण विहार स्थित एक प्राइवेट अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। @DelhiPolice जांच कर रही है। https://t.co/aSHja9fnJA
— NBT Dilli (@NBTDilli) November 4, 2026