புதிய புயல் சின்னம்..! 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!



tamil-nadu-yellow-alert-heavy-rain-forecast

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த பகுதியில் பேய் மழை பெய்ய போகுது...! அக்டோபர் 17-ல் கரையை கடக்கும் புயல் சின்னம்...!!!

11 மாவட்டங்களில் மிதமான மழை எதிர்பார்ப்பு

இதுதவிர செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்குச் செல்லும் மீனவர்களும் வானிலை நிலவரத்தைக் கவனித்து, உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: இந்த 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை! சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை...!!!