இந்தியா - அமெரிக்கா கூட்டுப் போர்பயிற்சி.. சீனா கண்டனம்..!



China FM Condemn to India

 

உத்திரகாண்ட் மாநிலத்தில் இந்தியா - அமெரிக்கா இராணுவங்கள் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டுப்பயிற்சி சீனா - இந்திய எல்லையில் இருந்து 100 கி.மீ தொலைவில் நடைபெறுகிறது. 

இந்த விஷயம் சீனாவுக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இராணுவ கூட்டுப்போர் பயிற்சிக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். 

china

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தியா சீனாவுடன் மேற்கொண்ட 1993, 1996ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை மீறி வருகிறது. இந்தியாவின் செயல் கண்டிக்கதக்கது" என்று தெரிவித்தார்.