புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கொரோனா வலியே இன்னும் முடியல..! அதுக்குள்ள சீனாவில் அடுத்து ஒரு சோகம்..! இப்படியா நடக்கணும்..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிற்கும் நிலையில் இதுவரை 3000 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவிலும் இதுவரை 30 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் உருவான சீனாவில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் இன்னல்களை சந்தித்துவரும் சீனாவுக்கு தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சோவ் என்ற நகரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் விபத்து சீனாவுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.