தனது பழைய உரிமையாளரை காண 7 நாட்கள் நடந்துவந்த ஒட்டகம்..! சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

தனது பழைய உரிமையாளரை காண 7 நாட்கள் நடந்துவந்த ஒட்டகம்..! சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

சீனாவில் நபர் ஒருவர் தான் வளர்த்த ஒட்டகத்தை வேறொரு நபரிடம் விற்றுவிட்டநிலையில், அந்த ஒட்டகம் 7 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மீண்டும் தனது பழைய உரிமையாளரிடம் வந்து சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் ஒட்டகம் ஒன்றை வளர்த்துவந்துள்ளார். சூழ்நிலை காரணமாக அந்த நபர் தனது ஒட்டகத்தை வேறொரு நபரிடம் அண்மையில் விற்றுள்ளார். ஒட்டகத்தை வாங்கியவர் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த ஒட்டகத்தை கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது புது உரிமையாளரிடம் இருந்து தப்பித்த அந்த ஒட்டகம் சுமார் 7 நாட்கள், 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக நடந்து தன் முந்தைய உரிமையாளரைத் தேடிவந்துள்ளது. மலைகள், பாலைவனம் என கடுமையான நிலப்பரப்புகளை கடந்து பயணம் செய்துள்ளது.

உடலெல்லாம் காயங்களுடன் தனது ஒட்டகத்தை பார்த்த அதன் பழைய உரிமையாளர், கண்களில் கண்ணீருடன் தனது ஒட்டகத்தை வரவேற்று அதற்கு சிகிச்சை வழங்கியதோடு அதை பாரம்பரிய முறைப்படி தனது வீட்டிற்கு வரவேற்றுள்ளார்.

மேலும், தனது குடும்பத்தில் ஒருதராக மாறிவிட்ட இந்த ஒட்டகத்தை இனி எந்த காரணத்திற்காகவும் விற்கமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo