மண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர்..! 27 நாட்களுக்கு பின் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..! எங்கு, எப்படி தெரியுமா..?

மண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர்..! 27 நாட்களுக்கு பின் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..! எங்கு, எப்படி தெரியுமா..?


buried-man-alive-for-27-days-2010-haiti-earthquake

Haiti நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தில் பல கட்டிடங்கள் அடுத்து தரைமட்டமானது. மேலும் பல பேர் மண்ணுக்குள் புதைந்தனர். கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இந்த பூகமத்தில் உயிர் இழந்தனர். இதில் இவான் என்ற இளைஞரும் பூகம்பத்தில் சிக்கினார்.

பல நாட்கள் ஆகியும் இவான் திரும்பி வராததால் அவர் உயிர் இழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் நினைத்தனர். இதனை அடுத்து பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது இவானின் உடம்பை சுமார் 27 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினர் வெளியே எடுத்தனர்.

Mystery

இவானை சோதித்ததில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை வழங்கினர். சிகிச்சைக்கு பிறகு உடல் நலத்துடன் திரும்பிய இவான் பூமிக்கு அடியில் கழிவு நீரை குடித்து தான் உயிர் வாழ்ந்ததாகவும், மீண்டும் உயிருடன் வந்தது தனக்கே ஆச்சரியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.