வயது 2, ஆனால், 60 வயது பாட்டி போல் காட்சி அளிக்கும் 2 வயது பெண் குழந்தை..! பதற வைக்கும் விநோத நோய்..!
பெஞ்சமின் பட்டன் நோய். உலகிலையே அரிதாக பார்க்கப்படும் இந்த நோய் பிரிட்டனை சேர்ந்த ஒரு தம்பதியினரின் குழந்தை பிறப்பதற்கு முன்பே இந்த நோயால் தாக்கப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அது என்ன பெஞ்சமின் பட்டன் நோய்? பொதுவாக நாம் அனைவரும் இளைமையில் இருந்து முதுமை தோற்றத்தை அடைய காரணம் நமது உடலில் இருக்கும் செல்கள் அழிவதுதான். நமது உடலில் இருக்கும் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாவதனால்தான் நாம் இளமை தோற்றத்துடன் இருக்க முடிகிறது.

ஆனால், இந்த குழந்தைக்கு உடலில் இருக்கும் செல்கள் படு வேகமாக அழியும். இதனால் வயதை மீறிய முதுமை தோற்றம் உண்டாகும். மேலும், பேசுவதில் சிரமம், இதய கோளாறு இப்படி இந்த நோய் பாதிக்கப்பட்டால் அவர்களது வாழ்க்கையே சூனியமாகிவிடும்.
இந்த நோய்தான் அந்த 2 வயது குழந்தைக்கும் உள்ளது. 2 வயதில்லையே 60 வயது பாட்டி போல் தோற்றமளிக்கின்றார் பிரிட்டனை சேர்ந்த சிறுமி இஸ்லானா. எவ்வளவோ மருத்துவ உதவிகளை நாடியும் இந்த நோயை சரி செய்யமுடியவில்லை. எவ்வளவு நாட்கள் இருப்போம் என்று தெரியவில்லை. ஆனால், மகிழ்ச்சியுடன் இஸ்லான வாழ்ந்துவருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.