ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் விழுந்து விழுந்து சிரிக்கும் மகள்! இதுதான் காரணமா? வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ!

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் விழுந்து விழுந்து சிரிக்கும் மகள்! இதுதான் காரணமா? வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ!



baby-laugh-while-bomb-plasting-in-syria

சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை பயங்கரவாதிகள் என கூறி அண்டை நாடான துருக்கி அவர்களை விரட்டியடிக்க கடந்த ஆண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் அதற்காக அந்நாட்டு ராணுவம் சிரியா எல்லைப் பகுதிக்குள் நுழைந்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அங்குள்ள சில நகரங்களையும்  தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் இராணுவத்திடமிருந்து நகரங்களை மீட்க குர்து போராளிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நாட்டின் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு ஏற்படுகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாமல், தூங்க முடியாமல் தங்களது குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரும்பாடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வன்முறையால் பல கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குண்டு வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.

siriya

இந்நிலையில் அப்பகுதியில் தனது நான்கு வயது மகள் செல்வாவுடன்  வசித்து வரும் அப்துல்லா என்ற நபர் அடிக்கடி ஏற்படும் குண்டு வெடிக்கும் சத்ததை கேட்டு தனது மகள் பயப்படக் கூடாது என்பதற்காக செய்துள்ள காரியம் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் அது ஒரு விளையாட்டு எனவும் அதனை கேட்டு சிரிக்க வேண்டும் எனவும் தனது 4 வயது மகளை சிரிக்க வைக்கிறார் தந்தை அப்துல்லா. குழந்தை செல்வாவும் ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் அது ஒரு விளையாட்டு என எண்ணி பயப்படாமல் சத்தம் போட்டு சிரிக்கிறாள்.

இந்நிலையில் அலி முஸ்தபா என்ற பத்திரிகையாளர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன ஒரு சோகமான உலகம் இது. மகள்  பயப்படுவதை திசைதிருப்ப தந்தை ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளார். அதில் ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் அவள் சிரிக்க வேண்டும் பயப்படக்கூடாது. என தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.