Video : ஓடும் பைக்கில் கணவனை செருப்பால் அடித்த மனைவி! என்னா அடி அடிக்குறாங்க பாருங்க! வைரலாகும் காணொளி...



husband-attacked-by-wife-with-sandal-on-bike-lucknow

பைக்கில் சென்ற கணவரை செருப்பால் அடித்த மனைவி – வைரலாகும் வீடியோ 

கணவன்-மனைவி இடையே சில நேரங்களில் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரணம். ஒரே வீட்டில் வாழும் போது, வித்தியாசமான பார்வைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் சிலரின் சண்டைகள் அளவைக் கடந்து வன்முறைகளாக மாறுவதும் புதிதல்ல.

அதன் ஒரு உண்மை உதாரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு இளம்பெண் பயணம் செய்து கொண்டு இருந்தனர். பொதுவாகவே அவர்கள் கணவன்-மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீடியோவில், இருவரும் வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது, பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழட்டி, முன்புறம் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த ஆளை அடிக்கத் தொடங்குகிறார். இது வழக்கமான சாலை போக்குவரத்துக்கு நடுவே, பரபரப்பான பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆச்சர்யமானது என்னவென்றால், அந்த ஆண் எதையும் கவலைப்படாமல் தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டே போகிறார்.

இதையும் படிங்க: Video : நொடிக்குள் வந்த எமன்! வீட்டு கேட்டை திறந்து வெளியே வந்த நபரை அடித்து தூக்கிய ஸ்கூட்டர்! வைரலாகும் அதிர்ச்சி காணொளி...

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இது குறித்து தங்களது அதிர்ச்சி மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இந்த நிகழ்வை நகைச்சுவையாகக் கொண்டாலும், மற்றவர்கள் அதனை கொடூரமான குடும்ப வன்முறை சம்பவமாக கண்டிக்கின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி...

இதையும் படிங்க: ஒற்றை கையால் கண்களை கட்டிக்கொண்டு தேங்காய்களை உடைத்த நபர்! அதுவும் எவ்வளவு தேங்காய் பாருங்க.. கின்னஸ் சாதனை!