உலகம் மருத்துவம் Covid-19 Corono+

48 மணி நேரத்தில் கொரோனாவை கொள்ளும் மருந்து.! ஏற்கெனவே மருந்து தயார்..! ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை.!

Summary:

Australian scientist says anti corono drug to cure with in 48 hours

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் இருந்து 48 மணி நேரத்தில் அந்த வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி என்னும் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை கொண்டு சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் ஏற்கனவே இந்த மருந்துக்கு அங்கீகாரம் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்துகள் வருவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தை கொண்டு குணப்படுத்தலாம் என அந்த ஆராய்ச்சி குழு கூறியுள்ளது.

இந்த ஆராய்ச்சி பற்றி கூறியுள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், மனிதனின் உடலில் இருக்கும் கொரோனா வைரசனின் ஆர்என்ஏ வை 48 மணிநேரத்தில் முழுமையாக அழித்து, பாதிக்கப்பட்டவரை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் எனவும், அதுவே பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்திலையே குணப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதனுக்கு எவ்வளவு அளவிலான மருந்தை கொடுக்கலாம் என்பது பற்றி தற்போது ஆராய்ச்சியாளர்கள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் உலகளவில் மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement