செம காமெடி வீடியோ! எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற வெளிநாட்டுப் பெண்

செம காமெடி வீடியோ! எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற வெளிநாட்டுப் பெண்


american girl trying to fill petrol in electric car

அமெரிக்காவில் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கி ஓட்டி வந்த ஒரு பெண் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திவிட்டு பெட்ரோலை நிரப்புவதற்காக பெட்ரோல் டேங்கை வெகு நேரமாக தேடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நீங்களும் பார்த்தால் நிச்சயம் வயிறு குலுங்க சிரிப்பீர்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் காருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவில் டெஸ்லா என்ற நிறுவனத்தின் சார்பாக அதிக அளவிலான எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இதனை அங்கு மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

electric car

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்காகவே அமெரிக்காவில் பல்வேறு புதிய சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதிதாக டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளார். அவர் வழக்கம் போல் தன்னுடைய காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக முயற்சி செய்த வீடியோ காட்சி தான் தற்போது வைரலாகி வருகிறது.

தான் செல்லும் வழியில் இருந்த பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்திய அந்தப் பெண், தன் காரில் பெட்ரோல் டேங்க் எங்கிருக்கிறது என்பதை சுற்றிச் சுற்றி தேடி வருகிறார். அந்த பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்கள் தாமாகவே எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வசதி கொண்டது. எனவே அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை.

electric car

அந்தப்பெண் இவ்வாறு நீண்ட நேரமாக பெட்ரோல் டேங்கை தேடும் காட்சியை பின்னால் காரில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். சில நிமிடங்களுக்குப் பிறகு பின்னால் இருந்த காரில் வந்த நபர் அந்த பெண்ணிடம் சென்று இதனைப்பற்றி விளக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் தன்னுடைய செயலை எண்ணி மிகவும் நகைப்புக்கு உள்ளானார்.