காதலியை கொன்று பிரிட்ஜில் பிளாஸ்டிக் கவர் சுற்றிவைத்த காதலன்; 5 மாதம் கழித்து அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

காதலியை கொன்று பிரிட்ஜில் பிளாஸ்டிக் கவர் சுற்றிவைத்த காதலன்; 5 மாதம் கழித்து அம்பலமான அதிர்ச்சி உண்மை.!


America Texas 35 Aged Girl killed by 42 Aged Boy friend 

 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஹெத்தேர் ஸ்சவாபி (வயது 35). இவரின் ஆண் நண்பர் சாட் ஸ்டிவன்ஸ் (வயது 42). போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஷாட், போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் புரிந்த நபர் ஆவார். 

இவருக்கும் - ஹெத்தெருக்கும் இடையே போதைப்பொருள் பழக்கத்தினால் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், மகளின் போதைப்பழக்கத்தை அறிந்த தாய், அவரை கடுமையாக கண்டித்துள்ளார். 

மேலும், சாட்டுடன் கொண்ட பழக்கத்தை கைவிடுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இதனை ஹெத்தேர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், கடந்த ஓராண்டாக தாயும் - மகளும் பேசிக்கொள்ளாமலேயே வாழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பெண்ணும், அவரின் ஆண் நண்பரும், ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மகளை தாய் தேடி வந்துள்ளார். 

காவல் நிலையத்திலும் புகார் அளித்த நிலையில், காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் ஷாட் தெரிவித்துள்ளார். 5 மாதங்களாக விசாரணை நடத்திய காவல் துறையினர், கடந்த வாரம் சாட்டின் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஷாட் வைத்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பெண்ணின் உடலை மீட்ட அதிகாரிகள், சாட்டை கைது செய்தனர்.