உலகம்

தாயின் தவறான பழக்கத்தால் நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

Summary:

America stephanie

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபணி என்ற பெண் தவறான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது குழந்தை  நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்டீபணி என்ற பெண் அதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் ஒரு நாள் மதுக்குடித்து விட்டு அந்த குழாயை அப்படியே வைத்து விட்டு உறங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஸ்டீபணியின் குழந்தைக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.

அதனால் நள்ளிரவில் சென்று மது அருந்திய குழாயை அறியாமல் அதில் தண்ணீர் ஊற்றி குடித்துள்ளது. குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு தொண்டையில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்டீபணி குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லாமல் போர்வையால் முடி குழந்தையின் வாயை திறந்து பாலை ஊற்றியுள்ளார். அடுத்த சிறிது நேரத்திற்குள் குழந்தை சுயநினைவை இழந்துள்ளது.

அதனை அடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், இரத்தத்தில் போதை மருந்து கலந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.அதனை அடுத்து போலீசார் ஸ்டீபணி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். 


Advertisement