#சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!
மைவி3 அட்ஸ் மோசடி விவகாரம்; அரசியல்கட்சி பிரமுகருக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ.!
கோயம்புத்தூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி3 அட்ஸ் (myV3 Ads) நிறுவனம், மக்களை மூளைச்சலவை செய்து மோசடியாக பல ஆயிரம் கோடி பணத்தை சேமித்து வருவதாக சமீபத்தில் குற்றசாட்டு எழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தவும் காவல் நிலையத்தில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்கட்சி பிரதிநிதி அசோக் ஸ்ரீநிதி என்பவரால் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மைவி3 அட்ஸ் நிறுவனத்தின் தரப்பும் தாங்கள் நியாயவாதிகள் என்ற விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறது. சட்டரீதியாக இருதரப்பும் போராட்டம் நடத்தினாலும், மக்களின் அறியாமையை வியாபாரமாக்கும் நிறுவனத்திற்கு ஆதரவாக, அவர்களிடம் முதலீடு செய்த பலரும் செயல்படுகின்றனர்.
இந்நிலையில், மைவி3 அட்ஸ் குறித்த மோசடியை வெளிக்கொணர்ந்து, அந்நிறுவனத்திற்கு எதிராக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அசோக் ஸ்ரீநிதிக்கு, மைவி3 அட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது இருக்கிறார். 2025 க்குள் உன்னை போட்டுத்தள்ளிடுவோம், நானே உன்னை கொலை செய்திடுவேன் என பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பகிரங்க கொலை மிரட்டல்:
— Ashok Srinithi (@AshokSrinithi) April 27, 2024
MYV3ADS மோசடி தொடர்பாக புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். (9042457527 - Kannan) pic.twitter.com/t1Ge6MZwkX