விமானம் மலையில் விழுந்து விபத்து: 132 பயணிகளின் நிலை என்ன.? வெளியான அதிர்ச்சி தகவல்.!all passangers died in flight accident

சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர். விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.