மனசாட்சி இல்லாத மனுஷங்க! நடக்க முடியாத தாயை சாலையில் தவிக்கவிட்டு சென்ற குடும்பம்! வெளியான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி....



abandoned-elderly-mother-ayodhya-road

உத்ரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் மனதை பதற வைக்கும் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று இடம் பெற்றுள்ளது. ராம்நகரி பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய சாலையில், வயோதிப தாயை அவரது குடும்பத்தினர் வாகனத்தில் கொண்டு வந்து, சாலையோரத்தில் கைவிட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சோகமான சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், நடக்க முடியாத நிலைமைக்கு ஆளான ஒரு மூதாட்டி சாலையோரத்தில் உட்கார்ந்திருப்பதும், அருகே ஒருவர் நின்றிருப்பதும் காணப்படுகிறது.

தற்காலிக உடல்நிலை குறைபாடால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, உடனடியாக தர்ஷன் நகர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், அவரது உடல்நிலை மோசமாகவும், நினைவாற்றல் குறைவால் அடையாளங்களை தெரிவிக்க இயலாத நிலையிலும் உள்ளார். இதனால், அவரை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பணத்துக்காக இப்படியா! ரூ.5 கோடி தான் முக்கியம் ! மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல்! வினோத சம்பவம்!

பகவான் ராமரின் நினைவிடம் என போற்றப்படும் அயோத்தியில், இது போன்ற பாசமற்ற செயல் பொதுமக்கள் மனதில் பெரும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகத்தின் கோரிக்கை மேலும் வலுத்து வருகிறது.

 

இதையும் படிங்க: கல் குழந்தை! பெண்ணின் வயிற்றில் கல்லாய் மாறிய மனித கரு! 30–40 ஆண்டுகள் கழித்து தான்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..