கல் குழந்தை! பெண்ணின் வயிற்றில் கல்லாய் மாறிய மனித கரு! 30–40 ஆண்டுகள் கழித்து தான்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..



rare-stone-baby-condition-lithopedion-xray-viral

அமெரிக்காவைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சாம் காலி சமீபத்தில் X சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு எக்ஸ்ரே படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஒரு பெண்ணின் வயிற்றுப் பகுதியில் சுண்ணாம்பு படிந்த குழந்தை உருவம் காணப்பட்டது. இது மருத்துவ ரீதியில் மிக அரிதான ‘லித்தோபீடியன்’ நிலை என அழைக்கப்படுகிறது, பொதுவாக 'கல் குழந்தை' என்று கூறப்படுகின்றது.

லித்தோபீடியன் என்பது, கருப்பைக்குள் அல்லாத எக்டோபிக் கருப்பம் ஏற்பட்ட பிறகு, அந்த கரு வளர்ச்சி நிறைவடைந்து இறந்துவிடும். பின்னர், தாயின் உடல் அந்த கருவை சுண்ணாம்பால் மூடி கல் போல உறையவைக்கிறது. இது உடலுக்கு தொற்றுநோய் வராமல் காத்திடும் ஒரு பாதுகாப்பு செயல்முறை ஆகும். இந்த நிலை அறிகுறியின்றி பல ஆண்டுகள் தொடரக்கூடும் எனவும், பொதுவாக சோதனைகளின் போது மட்டுமே இது கண்டறியப்படுகிறது எனவும் டாக்டர் சாம் காலி விளக்கியுள்ளார்.

இத்தகைய கல் குழந்தை சம்பவங்கள் உலகளவில் மிக அரிதாகவே பதிவாகின்றன. சில நேரங்களில், 30–40 ஆண்டுகள் கழித்து தான் இது எக்ஸ்ரே அல்லது அறுவை சிகிச்சையின் போது தெரியவரும். டாக்டர் காலியின் இந்த பதிவால், மருத்துவ உலகிலும், பொதுமக்களிடையிலும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது. இந்த உண்மைச் சம்பவம், மனித உடலின் வியத்தகு இயல்புகளை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது.

இதையும் படிங்க: பெண்ணின் வயிற்றில் 30 வருஷமாக இருந்து கல்லாக மாறிய குழந்தை! சிடி ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்..

 

---

இதையும் படிங்க: உலகத்தில் அடுத்தடுத்து நடக்கும் பாபா வாங்காவின் முன்கணித்த கணிப்புகள்! இனி நடக்கப்போவது என்னென்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்...