புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பதற வைக்கும் கொடூரம்... 10 முறை குத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி.!! 13 வயது சகோதரி கைது.!!
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 7 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 13 வயது சிறுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியூருக்கு சென்ற பெற்றோர்
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு 13 வயது மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அந்தப் பெற்றோரின் குழந்தைகள் வெளியூருக்கு செல்ல இருந்ததால் வீட்டில் பணியாளரிடம் தங்களது குழந்தைகளை ஒப்படைத்து விட்டு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டுப் பணியாளர் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
கத்திரிக்கோலால் குத்தி படுகொலை
இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. 7 வயது சிறுமி கழிவறையை சரியாக சுத்தம் செய்யவில்லை என 13 வயது சிறுமி அவரை திட்டியிருக்கிறார். இது தொடர்பாக இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி வீட்டிலிருந்த கத்திரிக்கோல் எடுத்து 10 முறை 7 வயது சிறுமியின் வயிற்றில் குத்தி இருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 7 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சும் கொடூரம்... மிக்ஸியில் அரைக்கப்பட்ட உடல் பாகங்கள்... முன்னாள் அழகிக்கு நேர்ந்த துயரம்.!!
13 வயது சிறுமி கைது
இதனைக் கண்டு அதிர்ச்சிடைந்த வீட்டுப் பணியாளர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறை அவரது சகோதரியான 13 வயது சிறுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ் பெண்மணி உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்காவில் மரணம்; சாலை விபத்தில் சோகம்..!