தி ஃபேமிலி மேன் பட இயக்குனருடன் திருமணம்.. சமந்தாவின் 2வது திருமண கிளிக்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்.!



Actress Samantha Marries ‘The Family Man’ Director Raj Nidimoru in a Private Ceremony at Isha Yoga Center 

தென்னிந்திய முன்னணி நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் பட இயக்குனரை கரம்பிடித்தார். தம்பதியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில், தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். 

எளிமையான முறையில் நடந்த திருமணம்:

இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி ஃபேமிலி மேன் பட இயக்குனர் ராஜ் நிடிமோராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இருவரும் எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், இன்று அதிகாலை ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்க பைரவ கோவிலில் இருவரும் திருமணம் செய்து செய்து கொண்டுள்ளனர். 

வாழ்த்து மழையை பொழியும் ரசிகர்கள்:

எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சமந்தா மற்றும் நிடிமோராவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது. திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவர்களது வாழ்க்கை சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தாவின் அழகிய திருமண புகைப்படம்: