சினிமாவை மிஞ்சும் கொடூரம்... மிக்ஸியில் அரைக்கப்பட்ட உடல் பாகங்கள்... முன்னாள் அழகிக்கு நேர்ந்த துயரம்.!!
மிஸ் சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் வடமேற்கு சுவிட்சர்லாந்து அழகியாக இவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2008 ஆம் வருட சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதி சுற்று வரை தகுதியானார். இவர் தாமஸ் என்ற நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட அழகி
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மாகாணத்தில் உள்ள பின்ங்கன் பகுதியில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த பெண் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பதை உறுதி செய்தனர். மேலும் இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தாமசை காவல்துறை கைது செய்தது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இதனைத் தொடர்ந்து அவரது கணவர் தாமஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததால் தனது மனைவியை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் தனது மனைவி கத்தியை கொண்டு தன்னை தாக்க வந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்த பின் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றை அரைத்து அமிலத்தில் கரைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ் பெண்மணி உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்காவில் மரணம்; சாலை விபத்தில் சோகம்..!
ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம்
மேலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஃபெடரல் நீதிமன்றத்தில் தாமஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பெடரல் நீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி ரத்து செய்தது. காவல்துறை விசாரணையில் தாமஸ் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அரசின் அதிரடி முடிவு.!!