13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் பெண்மணி உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்காவில் மரணம்; சாலை விபத்தில் சோகம்..!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், அண்ணா, வைட் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த கொடூர சாலை விபத்தில், 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி பலியானோரின் கோரமாக சிதைந்து இருந்ததால், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டது.
4 இந்தியர்கள் உயிரிழந்தனர்
இந்த விஷயம் குறித்து நடந்த விசாரணையில், விபத்தில் பலியானது ஹைதராபாத்தை சேர்ந்த ஆர்யன் ரகுநாதன், அவரின் நண்பர் பரூக் ஷைக், லோகேஷ் பாலாச்சாரலு, தமிழ்நாட்டை சேர்ந்த தர்சினி வாசுதேவன் என்பது உறுதியானது. இவர்கள் நால்வரும் கார் பூலிங் ஆப் (Carpooling App) வாயிலாக சந்தித்துக்கொண்டுள்ளனர். பின் ஒன்றாக பயணம் ஒன்றை மேற்கொண்டபோது சோகம் நடந்துள்ளது.
Four Indians, Including Two from Hyderabad, Killed in Fiery Multi-Vehicle Crash in Texas; DNA Fingerprinting to Identify Charred Bodies
— Sudhakar Udumula (@sudhakarudumula) September 4, 2024
A tragic multi-vehicle crash on U.S. 75 in Anna, Texas, claimed the lives of four Indian nationals, including two from Hyderabad, on Friday… pic.twitter.com/lKHQdxkoXS
கனரக டிரக் மோதி விபத்து
இவர்கள் டெக்ஸாஸ் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, கனரக டிரக் 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி ஏற்படுத்திய பயங்கர விபத்தில் இந்த சோகம் நடந்தது அம்பலமாகி இருக்கிறது. இவர்கள் நால்வரும் பென்டோன்வில்லே பகுதியில் தங்கியிருந்த நிலையில், வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு பின் மீண்டும் வரும்போது ஒன்றாக இணைந்து பயணத்தை தொடங்கியுள்ளனர். அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் இறுதி பயணமாகவும் அமைந்துவிட்டது.