JustIN: காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் தவெக?.. விஜயுடன் ரகசிய சந்திப்பு.!
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் விஜயுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு நடத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் பிரச்சாரம், மாவட்ட அளவிலான ஆலோசனைகள் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அடுத்து வரும் தேர்தல் பல திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதால் தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக, தவெகவுடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
செங்கோட்டையன் தவெகவில் இணைவு:
அதற்கேற்ப இபிஎஸ் பிரச்சாரம் செய்யும் இடங்களில் தவெக கோடியை தொண்டர்கள் பறக்கவிட்டனர். ஆனால் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்! விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய அரசியல் பிரபலம்! இத யாரும் எதிர்பார்க்கலையே....
காங். தலைவர் விஜயுடன் சந்திப்பு:
இதனை தொடர்ந்து கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதியாக பிரவீன் சக்கரவர்த்தி விஜயுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் தற்போது சந்திப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி குறித்து பேச்சு?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டேட்டா அனலிஸ்ட் பிரிவில் தலைவராக செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசி வருகிறார். முன்னதாக விஜய் நடத்திய பிரச்சாரத்தில் பாஜக அரசை எதிர்த்து விஜய் பேசி இருப்பாரே தவிர ராகுல் காந்தி குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் கூட்டணி முடிவு:
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தில் விஜய் இருந்தபோது, ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இதனால் விஜய் காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டது. இதன் காரணமாக விரைவில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து விஜய் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிருப்தியில் EPS! திமுகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி...! அதிமுகவை அடிமேல் அடிக்கும் திமுக! செம குஷியில் ஸ்டாலின்.!