அடக்கடவுளே... விளையாட்டில் தோல்வியடைந்த நபரை பார்த்து சிரித்த 7 பேர் சுட்டு கொலை!!

அடக்கடவுளே... விளையாட்டில் தோல்வியடைந்த நபரை பார்த்து சிரித்த 7 பேர் சுட்டு கொலை!!


7 members died because of laughing

பிரேசிலில் தான் விளையாடிய விளையாட்டில் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியடைந்ததை கண்டு அங்கிருந்த பார்வையாளர்கள் சிரித்ததால் ஆத்திரமடைந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் ஒலிவரா என்ற நபர் பில்லியர்ட்ஸ் என்ற விளையாட்டை விளையாடியுள்ளார். ஆனால் அவர் விளையாடிய இரண்டு விளையாட்டிலும் தொடர் தோல்வியை சந்தித்து வந்துள்ளார். இதனை பார்த்த பார்வையாளர்கள் ஒலிவராவை பார்த்து கிண்டலாக சிரித்துள்ளனர்.

Biracial

இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா துப்பாக்கியுடன் தனது நண்பர்களையும் அழைத்து வந்து கிண்டலாக சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேரை சுட்டு கொலை செய்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.