62 வயதில் ஆண் பாம்பின் துணை இல்லாமல் முட்டை இட்ட மலைப்பாம்பு.! குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!

62 வயதில் ஆண் பாம்பின் துணை இல்லாமல் முட்டை இட்ட மலைப்பாம்பு.! குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!


62 years old python lays seven eggs without help of male python

கடந்த 20 ஆண்டுகளாக ஆண் மலைப்பாம்பின் பக்கமே செல்லாத பெண் மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகள் இட்டுல சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் 62 வயதான மலைப்பாம்பு ஒன்று பாதுக்கப்பட்டுவருகிறது. இந்த மலைப்பாம்பு கடந்த ஜூலை 23ம் தேதி 7 முட்டைகளை இட்டுள்ளது. பொதுவாக இந்தவகை மலைப்பாம்புகள் 60 வயதுக்கு முன்னரே முட்டை இடுவதை நிறுத்திவிடுமாம்.

ஆனால் இந்த பாம்பு 62 வயதில் 7 முட்டைகள் இட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதில் மேலும் ஆச்சரியமான விஷயம் என்வென்றால் இந்த 62 வயதான மலைப்பாம்பு குறைந்தபட்சம் 20 வருடங்கள் ஒரு ஆண் மலைப்பாம்பு அதன் அருகில் இல்லாத நிலையிலும்  ஏழு முட்டைகளை இட்டுள்ளது.

ஆண் பாம்பின் துணை இல்லாமல் இந்த பாம்பு எப்படி முட்டை இட்டது என குழப்பமாக இருக்கும் நிலையில் இதுகுறித்து மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறும் போது, சிலவகை பாம்புகள் ஒருமுறை ஆண் பாம்புடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது வருங்காலத்திற்காக விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் பெற்றது என கூறியுள்ளார்.

அப்படி இருந்தாலும் இந்த மலைப்பாம்புக்கு அந்தவகை திறன்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த பாம்பு குறித்து ஆராய்ச்சி செய்ய அந்த 7 முட்டைகளில் இரண்டு முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் இரண்டு முட்டைகளில் பாம்புகள் வளரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மீதம் உள்ள மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருக்கும் பாம்புகளில் இந்த பாம்புதான் மிகவும் வயதான பாம்பு என மிருகக்காட்சி சாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறியுள்ளார்.