உலகம்

வயிறுவலியால் துடித்த பெண்! சோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

60 years old lady having 1898 stones in stomach

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் வயிறு வலி காரணமாகவும் வயிற்றுப்போக்கு காரணமாகவும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

60 வயது பெண்ணின் வயிறு மற்றும் பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  மேலும் இதனை உறுதி செய்வதற்காக லேப்ராஸ்கோப் மற்றும் சிறிய ரக கேமிரா ஒன்றினை அந்த பெண்ணின் வயிற்றில் உள்ளே செலுத்தி சோதனை செய்துள்ளனர். 

சோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர்.  இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சுமார் 40 நிமிடங்கள் போராடி அந்த பெண்ணின் வயிறு மற்றும் பித்தப்பையில் இருந்து சுமார் 1898 கற்களை வெளியே எடுத்தனர். 

இத்தனை கற்கள் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்பது இப்போதுவரை தெரியவில்லை. இதற்கு முன்னர் பிரித்தானியாவை சேர்ந்த 85 வயது பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 23 ஆயிரத்து 530 கற்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement