48 குழந்தைகளுக்கு தந்தை ஒருவர்தான்; ஐயோ மனைவியின் நிலை என்ன தெரியுமா?

ரெட்டிட் என்ற சமூகவலைதளத்தில் ஒருவருக்கு ஏற்படும் மிகவும் குழப்பமான சந்தேகத்திற்கிடமான கேள்விகளை பதிவிடுவர். அக்கேள்விகளுக்கு மற்றவர்கள் தங்கள் கருத்துகளை பதிலாக தெரிவிப்பார்கள். அதில் தனது பெயரை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் தனது சந்தேகத்தை பதிவிட்டுள்ளார். அதாவது 8 வருடங்களுக்கு முன்பு அந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
ஆனால் திருமணத்திற்கு முன்பே அவருடைய கணவர் தனது விந்துக்களை தானமாக வழங்கியுள்ளார். அதனை தனது மனைவியிடமும் தெரிவித்துள்ளார். மனைவி அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த விந்தணுக்கள் மூலம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கும் என நினைத்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது கணவரின் மூலம் எத்தனை குழந்தைகள் பிறந்து இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் அவரிடம் அது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவரின் கணவர் தெரிவித்த பதில் அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில்,
கடைசியாக கருத்தரிப்பு மையத்தில் இருந்த வந்த தகவலின் படி 47 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார். மனைவிக்கு தலையே சுற்றிவிட்டது 1-2 என்றால் பராவாயில்லை 47 குழந்தைகளா? அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அதில் என்ன ஒரு சட்ட சிக்கல் என்றால் விதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்த ஒருவருக்கு தனது பயாலஜிக்கல் தந்தை யார் என்று கேட்டால் உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பது சட்டம். எதிர்காலத்தில் 47 பேரும் அவர்தான் எனது தந்தை என உரிமை கொண்டாடினால் என்ன செய்வது என்று குழம்பி போய் உள்ளார். இதனால் அவரது கணவரை விவாகரத்து செய்யலாமா என்பது குறித்தும் வினா எழுப்பியுள்ளார். அதற்கு பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.