உலகம் லைப் ஸ்டைல்

1 இல்ல, 2 இல்ல..! 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் நீரில் துள்ளிக் குதிக்கும் அதிசய வீடீயோவை பாருங்க.! பலலட்சம் பேர் பார்த்து ரசித்த காட்சி.

நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் கடலில் துள்ளிக் குதித்து விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Craig Capehart என்ற நபர் ஒருவர் தனது நண்பர்கள் சிலருடன் இந்திய பெருங்கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை பிரமிக்கவைத்தது. ஆம், சுமார் நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் கடலில் துள்ளிக் குதித்து விளையாடியுள்ளது.

ஹம்பக் என்னும் ரகத்தை சேர்ந்த இந்த திமிங்கிலமானது தனது மொத்த உடல் எடையையும் மேலே தூக்கி, தண்ணீரோடு தொடர்பே இல்லாமல் துண்டாக உயரப் பறந்து மீண்டும் தண்ணீருக்குள் குதிக்கிறது. இவ்வளவு எடைகொண்ட இந்தவகை திமிங்கிலம் தனது மொத்த உடல் எடையையும் மேலே தூக்கி தண்ணீருக்குள் குதிக்கும் காட்சிகள் இதுவரை யாருடைய கேமராவிலும் பதிவானது இல்லை என கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சியை இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


Advertisement