உலகம்

ஊரடங்கை மீறி காதலியை பார்க்கசென்ற இளைஞர்! போலீசாரிடம் சிக்கியதால் நேர்ந்த கதி!

Summary:

1 month jail to cross lockdown in australia

மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த்தில்  ஹோட்டல் ஒன்றில் ஏராளமான நபர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த ஜொனாதன் டேவிட் என்ற 35வயது வாலிபர் அங்கிருந்த போலீசாரை ஏமாற்றிவிட்டு, வெளியே சென்றுள்ளார். ஆனால் வெளியே சென்றுகொண்டிருந்தபோது வழியில், ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மாட்டினார்.

அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஜொனாதன் மீண்டும் ஓட்டலில் இருந்து வெளியேறி சுற்றிகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தனது காதலியை பார்க்க ஹோட்டலில் இருந்து வெளியே வந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு 1 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement