43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
சற்று முன்.... ரகசிய சந்திப்பு! தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலதா அதிரடி அறிவிப்பு! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!
தமிழக அரசியல் களத்தில் கூட்டணி விவகாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், தேமுதிக மற்றும் திமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் ரகசிய சந்திப்பு
திருவனந்தபுரத்தில் திமுக தரப்பினருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தேமுதிக தரப்பில் இருந்து 8 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் பாணியில் மனைவி சொன்ன ஒரே வார்த்தை! கடைசி நேரம் வரை இழுபறி... பிரேமலதாவின் சீக்ரெட் பிளான் இதுதான்!
பகிரங்க பேச்சுக்கும் பின்னணி நகர்வும்
"எங்களுக்கு உரிய மரியாதை தரும் கட்சியுடன்தான் கூட்டணி" என பிரேமலதா முன்பு வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக தலைமையுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேமுதிக தொண்டர்களிடையே அதிருப்தி
கூட்டணி முடிவை அறிவிப்பதை தொடர்ந்து தள்ளிப்போட்டு வருவது தேமுதிக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிற கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் போதும், தேமுதிக தெளிவான முடிவை எடுக்காமல் இழுபறியில் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாமதம் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கலாம் என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, தலைமை மீது இருந்த தொண்டர் நம்பிக்கை மெல்ல குறைந்து வருவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: BREAKING: தேமுதிகவின் தேர்தல் தந்திரம்! பிரேமலதா முடிவால் அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!