டிக்-டாக் செயலியால் பிரிந்த குடும்பம்! நகைகளை சுருட்டிக்கொண்டு பெண் தோழியுடன் ஓட்டம்பிடித்த மனைவி - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் டெக்னாலஜி

டிக்-டாக் செயலியால் பிரிந்த குடும்பம்! நகைகளை சுருட்டிக்கொண்டு பெண் தோழியுடன் ஓட்டம்பிடித்த மனைவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சானாவூரணியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ -வினிதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. 

திருமணமான 45 நாட்களுக்கு பிறகு லியோ மனைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.இதனால் வினிதா தனிமையில் இருந்துள்ளார். 

அப்போது டிக்டாக் செயலியில் அதிக நேரம் செலவு செய்துள்ளார். அதன் பிறகு டிக்-டாக் செயலி மூலம் திருவாதவூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டிக்-டாக் செயலியில் இணைந்து வீடியோ வெளியிட்டு வந்தனர்.

ஒரு நாள் லியோ தனது மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது வினிதா தனது தோள்பட்டையில் அபியின் படத்தை ‘டாட்டூ‘ செய்து பெயரையும் பச்சை குத்தி இருந்ததை பார்த்து அவரை எச்சரிக்கை செய்துள்ளார்.ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த லியோ சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் வந்து பார்த்தவுடன் தான் தெரிந்தது அபி வனிதாவுக்கு நிறைய பரிசு பொருட்களை கொடுத்துள்ளார். மேலும் 20 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. 

இதனால் கோபமான லியோ, வினிதாவை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அப்போது அம்மா வீட்டிலிருந்து வினிதா மாயமாகிவுள்ளார். அதே நேரத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் காணாமல் போயுள்ளது. 

இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  நகைகளுடன் மாயமான வினிதா திருவாதவூரில் உள்ள தனது தோழி அபியுடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Advertisement


ServiceTree


TamilSpark Logo