தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
பேஸ்புக் பயனாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி! மொபைலிலிருந்து தானாகவே வெளியாகும் புகைப்படங்கள்

பேஸ்புக் பயனாளர்களின் மொபைல் போன்களில் இருந்த பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமலே திருடப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது உண்மை தான் என பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சில நாட்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டார். அந்தச் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பேஸ்புக் பயனாளர்கள் மீளாத நிலையில் புதிதாக மற்றுமொரு பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.
இந்த புதிய பிரச்சனையானது பல பேஸ்புக் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதாவது பேஸ்புக் பயனாளிகளின் 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. பயனாளர்களால் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை தவிர அவர்களது மொபைல் போனில் இருந்த பர்சனல் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருப்பது தான் மிகவும் அதிர்ச்சியான செய்தி.
இதற்கு காரணம் பேஸ்புக் அனுமதி பெற்ற மூன்றாம் தர ஆப்பினை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்யும் போது புகைப்படங்களுக்கான அனுமதி பயனாளர்களிடம் கேட்கப்படும். இதற்குப் பயனாளர்களும் அனுமதி அளிப்பர். ஆனால், அதைப் பாதுக்காக்கத் தவறியுள்ளது பேஸ்புக் நிறுவனம். இதன் மூலம் தான் அணைத்து புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், ஒரு வகையான bug ஆல் தான் இந்தத் தவறு ஏற்பட்டதாகவும், இப்பிரச்னை சரி செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.