வளர்ந்தது டெக்னாலாஜி! செல்போனில் திருமண நிச்சயதார்த்தம்! ஆச்சரியப்படுத்தும் வைரல் வீடியோ!

வளர்ந்தது டெக்னாலாஜி! செல்போனில் திருமண நிச்சயதார்த்தம்! ஆச்சரியப்படுத்தும் வைரல் வீடியோ!


online-engagement-video

தகவல்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்ததில் இருந்து பலருக்கும் வேலைகள் குறைந்துவிட்டன. கடைகளுக்கு சென்று துணிவாங்குவது, மளிகை பொருட்கள் வாங்குவது இவையெல்லாமே ஆன்லைனில் வாங்கி வருவதால் பல கடைகள் தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன.

தற்போது அதன் அடுத்த கட்டமாக சாப்பாடும் ஆன்லைனில் வாங்க ஆரம்பித்துவிட்டனர். தகவல்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பொதுமக்களுக்கு வீட்டில் இருந்தபடியே அனைத்தும் கிடைத்துவிடுகிறது. ஆனால் இதன்விளைவாக பலர் சோம்பேறி ஆகின்றனர். இதன் காரணமாக நோய்களும் ஏற்படுகிறது.

இதனால் வயதானவர்கள் கிண்டலுக்காக கூறுகையில், தற்போது உள்ள மக்கள் திருமணம் கூட ஆன்லைனில் செய்துவிடுவார்கள் போல என கூறி வந்தனர். ஆனால் அதனையும் தாண்டும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். 

திருமணத்திற்கு முன்னதாக நிச்சயதார்த்த விழாவிற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இருவராலும் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் உருவானது. எனவே பையனுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சயதார்த்தம் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், ஒரு செல்போனில் வீடியோ காலில் பெண் இருக்க, மற்றொரு செல்போனில் வீடியோ காலில் இளைஞர் இருக்க இருவருக்கும் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றது. குடும்பத்தினர் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பதிலாக, செல்போனுக்கு வைத்தனர். பெண்ணுக்கு தலையில் பட்டு துணியை போடுவதற்கு பதிலாக, செல்போனுக்கு அதை அணிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.