தவறான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிடீங்களா.? கவலை படாதீங்க.! இனி ஈஸியா திரும்ப பெறலாம்.!



Jio Introduces Recharge Cancellation Feature

மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது தவறுதலாக வேறு எண்ணுக்கு பணம் செலுத்துவது பலருக்கும் நேரும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக அவசர நேரங்களில் எண்ணை சரியாக சரிபார்க்காமல் Recharge செய்வதால் பணத்தை இழக்கும் நிலை உருவாகிறது. இதுவரை இதற்கு பெரும்பாலும் தீர்வு இல்லாமல் பயனர்கள் மீண்டும் தங்களது எண்ணுக்கு தனியாக Recharge செய்து வந்தனர்.

இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் ஜியோ நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தவறாக செய்யப்பட்ட Recharge ஐ குறிப்பிட்ட நேரத்திற்குள் Cancel செய்து பணத்தை மீண்டும் பெற முடியும். இந்த புதிய அம்சம் தற்போது பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்காக முதலில் MyJio App ஐ திறந்து, அதில் Recharge History என்ற தேர்வுக்குள் செல்ல வேண்டும். அங்கு தவறாக செய்யப்பட்ட Recharge ஐ தேர்ந்தெடுத்து அதற்கான Cancel Plan என்ற Option ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Reversal to Original Mode of Payment என்பதை Select செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் புது அப்டேட்.. மெசேஜ்களை ‘Schedule’ செய்யும் புதிய வசதி! இனி அதெல்லாம் மறக்கவே மாட்டோம்.... குஷியில் பயனர்கள்..!!!

jio browser
அதன்பின் மீண்டும் Cancel Plan என்ற Option ஐ கிளிக் செய்தால் தற்போது செய்யப்பட்ட Recharge ரத்து செய்யப்படும். 

அதன் மூலம் செலுத்திய தொகை பயனரின் அசல் Payment Method க்கே திரும்ப அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவறான Recharge காரணமாக ஏற்படும் பண இழப்பை தவிர்க்க முடியும்.

ஆனால், இந்த வசதியை பயன்படுத்த சில முக்கிய நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. Recharge செய்த 3 மணி நேரத்திற்குள் மட்டுமே அதை Cancel செய்ய முடியும். மேலும் தவறாக Recharge செய்யப்பட்ட அந்த Plan பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!