பேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? இதோ அருமையான வழி!



How to find how long we are spending time for Facebook

இன்றைய கால கட்டத்தில் ஃபேஸ்புக் , வாட்ஸாப்ப் பயன் படுத்தாதவர்களை கணபதி மிகவும் அரிது. காலையில் எழுந்தது தொடங்கி இரவு படுக்கும் வரை பேஸ்புக்கே கதி என்று கிடப்பவர்கள் ஏராளம்.

இதற்காகவே புதுப்புது அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது, இந்நிலையில் ஒரு நாளில் எவ்வளவு நேரம் நாம் ஃபேஸ்புக்  மூலம் செலவழித்தோம் என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ள இந்த வசதி உதவுகிறது.

இதை எப்படி தெரிந்துகொள்வது?

முதலில் உங்களுடைய ஃபேஸ்புக் செயலியின் முகப்பு பக்கத்திற்கு செல்லவேண்டும், . பின்பு முகப்பு பகுதியில் செட்டிங்ஸ் என்ற பக்கம் இருக்கும் அதன் பக்கம் செல்ல வேண்டும்

அடுத்தது செட்டிங்ஸ் பக்கத்தில் உள்ள ஃபேஸ்புக்கில் Your Time ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

கீழே கொடுக்கபட்டுள்ள புகைப்படத்தை போன்று உங்களது ஃபேஸ்புக் பயன்பாடு அட்டவணை வடிவில் கொடுக்கப்படும்.

Latest tamil news

பின்பு அங்கு இருக்கும் எந்த பாரை க்ளிக் செய்தாலும் குறிப்பட்ட நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் பேஸ்புக்கைப் பயன்படுத்தினீர்கள் தெளிவாக பார்க்க முடியும்.

. மேலும் உங்களின் வசதிற்கு ஏற்ப உங்களுக்கு வேண்டுமெனில் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்படும்.