உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்தில் எந்நேரமும் முடங்கும் இன்டர்நெட் சேவை, வெளியான அவசர அறிவிப்பு.!

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்தில் எந்நேரமும் முடங்கும் இன்டர்நெட் சேவை, வெளியான அவசர அறிவிப்பு.!


global internet shutdown next 48 hours

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

 “த இண்டர்நெட் கார்பரேஷன் ஒப் நேம்ஸ் அண்ட் நம்பர்“ என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சேவைகள் தொடர்பு இழக்கூடும் 

மேலும் சமீபகாலமாக இணையதளங்களில் மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எடுத்து வருகிறது.இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் க்ரிப்டோகிராஃபிக் கீயை மாற்றும் பணியையும் ஐசிஏஎன்என் மேற்கொள்ள உள்ளது. 

இவ்வாறு டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்  இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது.

இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், இணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் போன்றவற்றிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.