கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் தொலைபேசி, கம்ப்யூட்டர்கள்..! எச்சரிக்கைவிடுக்கும் முன்னணி நிறுவனம்..!

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் தொலைபேசி, கம்ப்யூட்டர்கள்..! எச்சரிக்கைவிடுக்கும் முன்னணி நிறுவனம்..!


computers-and-mobile-phones-affect-by-corono-virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை 213 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 10000 க்கு அதிகமானர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் வைரஸ் தாக்குதல் பற்றியும், அதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் ஏராளமான மக்கள் இணையங்களில் தேடிவருகின்றனர்.

Corono virus

இதனை பயன்படுத்தி இணையத்தில் கொரோனா வைரஸ் என்ற பெயரில் ஏராளமான PDF document format-ல் உள்ள ஃபைல்கள் உலாவுகின்றன. இதுபோன்ற பைல்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை வைத்து உங்கள் கணினி மற்றும் தொலைபேசிகளை ஹேக் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக பிரபல anti virus நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற போலியான பைல்களை நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது உங்கள் கணினி, மொபைல் போன்களில் மால்வேர்கள் ஊடுருவுகிறது. எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Corono virus