ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!

ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!


central-government-blocked-all-porn-sites-in-india

நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மது மற்றும் ஆபாச விடீயோக்கள். இதை கருத்தில்கொண்டு உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 827 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Central Government

இதற்கு முன்பு  2015ம் ஆண்டு, குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்துள்ள இணையதளங்களை முடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 857 ஆபாச இணையத்தளங்களை மொத்தமாக முடக்கியது மத்திய அரசு. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை பின்வாங்கி, குழந்தைகளின் ஆபாச படங்களை கொண்ட இணையதளங்களை மட்டுமே முடக்க உத்தரவிட்டிருந்தது.

Central Government

இதை எதிர்த்து உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் அணைத்து தரப்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டுமென மனு கொடுக்கப்பட்டது.  வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 2015ம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவை குறிப்பிட்டு, அந்த 857 இணையதளங்களை மீண்டும் முடக்க உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட 30  இணையதளங்களில் எந்தவிதமான ஆபாச படங்களும் இல்லையென உறுதி செய்து.

இந்நிலையில் 827 இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனால் மிகவும் பிரபலமான பல இணையதளங்கள் முடுக்கப்பட்டுள்ளன.