இன்டர்நெட் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்போ உடனே இத படிங்க! மகிழ்ச்சியான செய்தி!



5g-technolgy-launching-soon-in-india

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அபார வளர்ச்சி அடைந்துவருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது தொலைபேசியும் அதனை சார்ந்த விஷயங்களும்தான். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு போன், பின்னர் வீட்டுக்கு ஓன்று, தற்போது அனைவரிடத்திலும் ஒன்றுக்கு இரண்டாக மொபைல் போன் உள்ளது.

தொலைபேசியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது இன்டர்நெட். ஜியோ தனது சேவையை தொடங்கியவுடன் அனைவரும் இன்டர்நெட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

5g technology

பொதுவாக 2G , 3G , 4G என இணையத்தின் வேகம் மற்றும் அளவீடு குறிக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலும் 4G இணையத்தைத்தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். நிமிடத்திற்கு 1GB என்ற அளவில் இதன் வேகம் உள்ள நிலையில் இந்தியாவில் விரைவில் 5G சேவை தொடங்கப்பட்ட உள்ளது.

இதற்கான பரிசோதனைகள் நடைபெற்றுவரும் நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 5G அலைகற்றை விற்பனைக்கு வரும் என்றும் கூறுகின்றனர். 5G சேவை பயன்பாட்டிற்கு வந்தால் குறைந்தபட்சம் நிமிடத்திற்கு 20GB வரை இதன் வேகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

4G சேவைலையே இப்படின்னா அப்போ 5G வந்துட்டா எப்படி இருக்கும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க!