எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!
#JUSTIN: மழையின்போது செல்போனில் பேச்சு.. மின்னல் தாக்கி இளைஞர் அகால மரணம்.. கடலூரில் ஷாக்.!
மழையின்போது செல்போன் பேசிய இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
மழை பெய்தது:
Cuddalore Youth Dies Lightning: கடலூர் மாவட்டத்தில் காலையில் இருந்து இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் திடீர் மழை காரணமாக மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து சற்று விடுபட்டு இருக்கின்றனர். இதனிடையே, கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!
கடற்கரையில் கொண்டாட்டம்:
இளைஞர்கள் மூவரும் வெள்ளி கடற்கரைக்கு சென்று வீடியோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்போது, இடியுடன் கூடிய தீவிர மழை பெய்த நிலையில், இளைஞர்கள் ஹரிஹரன், விஷால், ரவி குளித்து மகிழ்ந்து இருக்கின்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி இருக்கிறது.

Lightning (File Picture)
இளைஞர் பலி:
இந்த சம்பவத்தில் ஹரிஹரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் சென்ற விஷால், ரவி படுகாயமடைந்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஹரிஹரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை:
மக்கள் கடற்கரைக்கு மேலும் வராமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை மழையில் செல்போனில் பேசியபடி கடற்கரையில் மகிழ்ந்த இளைஞர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் ஒருவர் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "நான் தூக்கு மாட்டப்போறேன்" - காதலியிடம் நடித்த இளைஞன்.. எமனான விளையாட்டு.. காதலி கண்முன் சோகம்.!