செக்ஸ் டார்ச்சர்.. அரிவாள்மனையால் சம்பவம் செய்த மருமகள்.. சென்னையில் பரபரப்பு.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!



Chennai Woman Arrested for Killing Father-in-Law After Alleged Sexual Harassment

கணவர் இறந்த 3 மாதத்தில் மருமகளை மகளாக கவனிக்க வேண்டிய கடமையில் இருந்த மாமனார், அத்துமீற முயன்றதால் கொலை செய்யப்பட்டார்.

தம்பதிகள்:

சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், கஸ்தூரி பாய் நகரில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 58). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகன் மணிகண்டன் (வயது 32). காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மீனா (வயது 28). மீனா - மணிகண்டனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!

தவறாக நடக்க முயன்றார்:

இவர்களுக்கு ஈஸ்வரி என்ற 8 வயது மகளும், சரண் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். இதனிடையே, 3 மாதங்களுக்கு முன்னதாக மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கணவரை இழந்து தவித்த மீனா, அவரின் வீட்டிலேயே மாமனாருடன் வசித்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக்க நினைத்த பெருமாள் மருமகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

Crime news

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்:

இந்த விஷயம் குறித்து மாமனாரை பலமுறை மீனா எச்சரித்தும் பலனில்லை. இதனிடையே, நேற்று அதிகாலையில் மீனா குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டு இருந்தபோது, பெருமாள் மீண்டும் மீனாவை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மீனா மாமனாரை எச்சரிக்க, அவர் கேட்கவில்லை. 

உயிரிழப்பு & கைது:

இதனால் சமயலறைக்குச் சென்ற மீனா, அரிவாள்மனை எடுத்து வந்து பெருமாளின் கழுத்தில் வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: "என்னோட நீ வாழவில்லை என்றால் சாவு" - திருமணமான அத்தை மகள் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!