30 வயது இளம்பெண் வீடுபுகுந்து பலாத்கார முயற்சி.. பதற்றத்தில் பெண்ணுக்கு நடந்த சோகம்...!



in Tiruvannamalai Vandavasi 30 Year Old Girl Abused

வந்தவாசியில் நடந்த கொடூரம் இளம்பெண்ணை மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

30 வயது பெண்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் உள்ள கிராமத்தில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளார். இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: மூதாட்டியையும் விட்டுவைக்காத கொடுமை.. 50 வயது நபர் கைது.. பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்..!

சில்மிஷம்:

அப்போது, பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியரான சரவணன் (வயது 34), இளம்பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பெண் தண்ணீர் கொண்டு வர வீட்டுக்குள் சென்ற நிலையில், சரவணன் பெண்ணுக்கு பின்னே சென்று சில்மிஷம் செய்துள்ளார்.

Crime news

மருத்வவமனையில் அனுமதி:

இதனால் அதிர்ந்துபோன இளம்பெண் வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சரவணன் தப்பி ஓடுவதை கண்டு பதறியபடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!