இயக்குநர் பாரதி ராஜாவின் சர்ச்சைகள்.. பயில்வான் ரங்கநாதனின் முழு வீடியோ.!
மூதாட்டியையும் விட்டுவைக்காத கொடுமை.. 50 வயது நபர் கைது.. பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்..!
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
தனியாக இருந்த மூதாட்டி:
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம், பேரப்பன்குட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெய சந்திரன் (வயது 50). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் கடலூர் ஆல்பேட்டை பகுதியில் இருந்துள்ளார். அப்போது, வீடு ஒன்றில் 93 வயதுடைய மூதாட்டி தனியாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பாலியல் தொல்லை:
இதனை கவனித்த ஜெய சந்திரன், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மூதாட்டி அலறி சத்தமிட்ட நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த பேத்தி வந்து பார்த்துள்ளார். அப்போது, ஜெயசந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

அதிரடி கைது:
இதனையடுத்து, மூதாட்டியிடம் நடந்ததை கேட்டறிந்த பெண்மணி, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இந்த புகாரின் பேரில் ஜெய்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!