தமிழகம்

வேலைக்கு வந்த திருமணமான பெண்! ஆபாசவீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்! பின் நேர்ந்த விபரீதம்!

Summary:

Youngman blackmailed married women with her video

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ் ஆனந்த். 28 வயது நிறைந்த இவர் அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற  டிடெக்டிவ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவர் சமீபத்தில் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் தேவை என இணையதளத்தில் விளம்பரபடுத்தியிருந்தார். இந்நிலையில்  மதுரை செல்லூரை  சேர்ந்த லோடுமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆந்திரப்பெண் ஒருவர் வறுமையின் காரணமாக அந்த வேலைக்கு  விண்ணப்பித்துள்ளார். 

பின்னர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு  டிடெக்டிவ் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென கதவுகளை அடைத்த கணேஷ் ஆனந்த் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். மேலும் அவர் மறுத்ததால் அங்கிருந்த கட்டையால் அவரை அடித்து, ஆடைகளை கலைக்க வற்புறுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்த கணேஷ் ஆனந்த்,  எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய அந்தப் பெண் நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கணேஷ் ஆனந்தை கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் கணேஷ் ஆனந்த் பெண்ணின் கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தன்னை கணேஷ் மிரட்டலாம் என பயந்த அப்பெண் நடந்த அனைத்தையும் போலீசாரிடம் கூறி கணேஷ் ஆனந்த் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் கூறியது உண்மை என உறுதி செய்தபின் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement