அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர்... தோ‌ஷத்தால் பாதிப்பு...! காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண்.! என்ன காரணம்.?

அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர்... தோ‌ஷத்தால் பாதிப்பு...! காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண்.! என்ன காரணம்.?


young women suicide

கோவை மாவட்டம்  ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர்  பகுதியை சேர்ந்த இளம்பெண் மாலதி என்பவரும், காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான பார்த்திபன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பார்த்திபன் மனைவியுடன் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாவே மாலதி மனவருத்தத்துடன் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடரபாக போலீசார் நடத்திய விசாரணையில், மாலதியின் வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை. இது எனக்கு நானே பண்ணிகிட்ட பரிகாரம். இதுவரை நான் எடுத்த அனைத்து முடிவுகளுமே சரியாக தான் இருந்தது. ஆனால் நான் என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம் தான்.

எனது கணவருக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர். ஆனால் நான் அது எதையும் கண்டு கொள்ளாமல், போராடி காதலரை கரம் பிடித்தேன். ஆனால் அந்த தோ‌ஷத்தால் எனது கணவர் தினம், தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை.

எனது கணவர் உயிர் காப்பாத்துறதுக்காக என் உயிரை விடவும் தயாராக இருக்கேன். இது நானே நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இதுக்கு யாரும் காரணம் இல்லை. நான் மற்றவர்களுக்கு செய்த பாவத்துக்கு மன்னிப்பை தவிர வேற எதுவும் கேட்க முடியாது. வாழும் போது தான் யாருக்கும் உதவியா இருக்கவில்லை. சாகும்போதாவது யாருக்காவது உதவியாக இருக்க விரும்புறேன். அதனால் என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுத்து விடுங்கள். நான் எடுத்த இந்த முடிவுக்காக யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.