"அவங்க நம்ம ஆளு இல்ல இது சரியா வராது..." கைவிட்ட காதலன்.!! காதலிக்கு நேர்ந்த சோகம்.!!
சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த இளம் பெண் அனுஷா(18). இவரும் கண்ணன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கண்ணன் (21) என்ற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம் பெண்ணும் இளைஞரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கண்ணனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனால் சஞ்சையின் பெற்றோர் ஊராட்சி தலைவரிடம் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.

இதற்கடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரித்து வைத்துள்ளனர். இதனால் சஞ்சய் கண்ணன், அனுஷ்யா உடனான பழக்கத்தை திடீரென நிறுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: "நம்மள நிம்மதியா விடமாட்டாங்க.. " குடும்பத்தார் எதிர்ப்பு.!! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!!
அனுஷ்யாவின் பெற்றோர்கள் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சஞ்சய் கண்ணன் தூண்டுதல் மூலமாக தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர். சஞ்சய் கண்ணனை கைது செய்ய கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: "தனிமையில் பல நாள் உறவு..." கைவிட்ட உயிர் காதலன்.!! நர்சுக்கு நேர்ந்த சோக முடிவு.!!