கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவியை இளைஞன் செய்த கொடூரம்!



young man killed women

துாத்துக்குடி மாவட்டத்தில் நடேஷ் என்பவருக்கும் மகாராணி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி பள்ளிக்கு செல்லும் வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில்,
நேற்று முன்தினம் நடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். மகனும் பள்ளிக்குச் சென்றிருந்தார். மகாராணியின் கணவன் நடேஷ் வேலை முடிந்து வீடுதிரும்பியபோது வீட்டில் தனியாக இருந்த மகாராணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த நடேஷ் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகாராணியின் கணவர் நடேஷ் வெளிநாட்டு வேலைக்கு சென்றிருந்தபோது ,அதே பகுதியில் வசிக்கும் இளவரசன் எனும் இளைஞனுடன் மகாராணிக்கு பழக்கம் ஏற்பட்டது.

husband and wife

இவர்களின் பழக்கத்தை தெரிந்துகொண்ட மகாராணியின் கணவர் அதனை கண்டித்துள்ளார். இந்தநிலையில் நடேஷ் வெளிநாட்டு வேலையை விட்டு துாத்துக்குடியில் பணியில் சேர்ந்து விட்டதால் இளவரசனின் தொடர்புக்கு இடையூறாக இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மகாராணியை சந்திக்க அவரது வீட்டிற்கு இளவரசன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் அவரை கொலை செய்து விட்டு இளவரசன் அங்கிருந்து தப்பியுள்ளார். இதனையயடுத்து போலீசார் குற்றவாளியை தேடிவந்த நிலையில், இளவரசன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்து, மகாராணியின் மேலிருந்த ஆத்திரத்தால் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.