ரயில்முன் பாய்ந்த இளைஞர்.. பை நிறைய கற்கள்..!

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் பாதையில் சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடந்தது.
இதனை கண்ட, அந்த வழியாக சென்றவர்கள் அடையாளம் தெரியாத சடலம் குறித்து நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதலாக, உடலுக்கு அடுத்ததாக ஒரு பை கற்கள் இருந்தது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா, கல்லுடன் வருகிறாரா? ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என ரயில்வே போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை சரியாக கணிக்க முடிய வில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.