வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
என் ஆசை மகளே... கொதித்து கொண்டிருந்த வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை.! கதறி துடிக்கும் தந்தை.!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு 4 வயதில் ஹேமா மகள் இருந்துள்ளார். இந்தநிலையில் அவர்களது வீட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளனர்.
அப்போது அவர்களது வீட்டில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஹேமா கொதித்து கொண்டிருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து அலறி துடித்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சார்லஸ், தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹேமாவை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை ஹேமா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது ஆசை மகளின் மறைவால் கதறி அழுதுள்ளார் சார்லஸ். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.